மாமியார்
Sinopsis
அங்கமுத்து அலங்காரத்தை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது!
ஆனால், நாலுமணிக்கே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று அவள் சொல்லி அனுப்பியவர்களில் ஒருவர் கூட இன்னும் வரவில்லை.
"கிளிப்பிள்ளைக்குப் போல சொல்லி அனுப்பினேனே" என்று, கிளிப்பிள்ளை போல, அங்கமுத்து சொல்லிக் கொண்டே இருந்தாள்.
ஓர் இடத்தில் உட்கார முடியவில்லை; அப்படியும் இப்படியும் நடந்து கொண்டு இருந்தாள். வாசலைப் பார்த்துப் பார்த்து, கண் பூத்துப் போய் விட்டது. யாரையும் காணோமே என்ற எரிச்சல் வேறு! அவள் உடம்புக்கு இதெல்லாம் தாங்குமா? வியர்த்துக் கொட்டியது.
கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொள்வதும் கண்ணாடி முன்னே நின்று பவுடர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வதுமாக இருந்தாள்.
நேரங்காலம் தெரியாமல் வேலைக்காரி முனியம்மா வந்து "அம்மா, காப்பி ஆறிப்போகிறது" என்றாள்.
"கொண்டு போய் வாழை மரத்தடியில் கொட்டு!" என்று அங்கமுத்து கர்ச்சித்தாள்!
ஆமாம், கர்ச்சிக்கத்தான் செய்தாள்!
அவளுக்கு சாதாரணமாகவே பேச வராது. வாயைத் திறந்தால் கர்ச்சனை தான்!
அவள் என்ன சிங்கமா? என்று கேட்டார்கள்.
ஆமாம், அவள் சிங்கம்தான்!
ஆண் சிங்கமாகப் பிறந்திருக்க வேண்டியவள்! ஓர் இலக்கம் தவறிப் போய், பெண்ணாகப் பிறந்து விட்டாள்
ஆள் பார்வைக்குத்தான் யானைக் குட்டி போல இருப்பாளே தவிர. உறுமினால், சிங்கம்தான்! பார்வை-பேச்சு மூச்சு எல்லாமே சிங்கம்தான்.
அவளுக்கு என்று ஒரு பார்வை இருக்கிறது பாருங்கள். அது சிங்க நோக்கு! அந்தப் பார்வையைத் தாங்கிக் கொள்ள யாராலும் முடியாது! "அய்யப்பா சரணம்" என்று அவளுடைய காலடியில் விழுந்துவிட வேண்டியது தான்!
பஞ்சுப் பொதி போல கு...
Léelo en cualquier dispositivo
Ficha Técnica
Editorial: Amutha Ganesan
ISBN: 9798233859427
Fecha de lanzamiento: 27/01/2026
Especificaciones del producto
Reseñas sobre மாமியார்
Comparte tu experiencia con la comunidad lectora.
0 Reseñas
Sólo por opinar entras en el sorteo mensual de tres tarjetas regalo valoradas en
20€